• தெஹ்ரானிடமிருந்து மேலும் சலுகைகளை எதிர்பார்க்காமல் பைடன் நேரடியாக அணு உடன்படிக்கைக்கு   திரும்பிச் செல்லவேண்டும்.

அமெரிக்காவுக்கும்  ஈரானுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய போக்கு 8 வருடங்களாக பராக் ஒபாமா நிருவாகத்தில் துணை ஜனாதிபதியாக  பணயாற்றிவிட்டு 2017  ஆண்டில் வெளியேறியபோது இருந்ததையும் விட முற்றிலும்  வேறுபட்ட போக்கில் இருக்கிறது.

அமெரிக்கா  ஏனைய  சர்வதேச வல்லாதிக்க நாடுகளுடன் சேர்ந்து 2015 ஆம் ஆணடில் ஈரானுடன் அணு உடன்படிக்கையொன்றில் கைச் சாத்திட்டது. அத்துடன் இரு நாடுகளும் ஈராக்கில் இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு எதிரான போரில் ஒத்துழைத்துச் செயற்பட்டுக்கொண்டுமிருந்தன.

பிறகு ஜனாதிபதியாக  வந்த டொனால்ட் ட்ரம்ப் ' விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் ' என்று  அழைக்கப்படகின்ற அணு உடன்படிக்கையில் இருந்து வெளியேறி ஈரான் மீதான தடைகளை மீண்டும் விதித்தார். ஆனால், இப்போது ஜனவரி  20  பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கும்போது அவர் எதிர்நோக்கப்போகின்ற   மிகவும்  கடுமையான சவாலாக ஈரான் இருக்கப்போகின்றது.

தேர்தலுக்குப் பிறகு பைடன் அணு உடன்படிக்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால்,  ஈரான் மீதான கட்டுப்பாடுகளை நீடிப்பதில் அக்கறை காட்டப்போவதாகவும் மேற்காசியாவில் இஸ்லாமியக் குடியரசின் கெடுதியான நடவடிக்கைகளைப் பற்றி கலந்தாலோசிக்கப்போவதாகவும்  அவர் கூறினார்.

( அணு உடன்படிக்கையின் பிரகாரம் ஈரான் மீதான அந்த கட்டடுப்பாடுகள் 15 வருடங்களுக்கானவை) இது உடன்படிக்கையில் இருந்து  ஒருதலைப்பட்சமாக வெளியேறிய பிறகு ட்ரம்ப் செய்தததைப்போன்று பைடனும் முதல் உடன்படிக்கையில் திருத்தங்களை பைடனும்  விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது.

அணு உடன்படிக்கை குறித்து  மீளப்பேச்சுவார்தை நடத்துவதற்கு ஈரான்  மேசைக்கு வரும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்தார்.ஆனால், தெஹாரான்  நெருக்குதல்களுக்கு அடிபணியவில்லை.ட்ரம்ப்  நிருவாகம் 'உச்சபட்ச நெருக்குதல்களைக்' கொடுத்தபோது ஈரான் ' உச்சபட்ச எதிர்ப்பை ' வெளிக்காட்டியது.பதற்றநிலை இரு நாடுகளையும் இரு தடவைகள் போரின் விளிம்புக்குகொண்டு சென்றது.

அதாவது முதலில் ஈரான் அமெரிக்க ட்ரோனை 2019 ஜூனில் சுட்டு வீழ்த்தியபோது ; இரண்டாவதாக, இவ்வருடம் ஜனவரியில்  அமெரிக்கா ஈரானிய ஜெனரல்காசிம் சுலைமானியை கொலை செய்தபோது.

இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவத்தை கொாடுத்துக்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையில் இழந்துபோன நம்பிக்கையை மீள்வித்துக்கொண்டு உடன்படிக்கையை புதுப்பிக்க பைடனால் முடியுமா என்பதே இப்போதுள்ள முக்கியமான  கேள்வியாகும்.

அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதைையை ஈரானுக்கு நிராகரிக்கக்கூடியதாகமாத்திரமல்ல,பிராந்தியத்தில் ஓரளவு ஒழுங்கமைதியை ஏற்படுத்தக்கூடியதாகவும் அணு உடன்படிக்கையை புதுப்பிப்பது சகல தரப்புகளின் நலன்களுக்கும் உதவக்கூடியதாகும்.பைடன் முதலில் தன்னை முனைப்புறுத்திக்கொண்டு மேற்காசியாவில் உள்ள நேசநாடுகள் ஈரானிய ஆட்சியின் முக்கியஸ்தர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கட்டுப்படுத்தவேண்டும்.

அத்துடன்  உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு  திரும்புவதற்கு தெஹரானை வலியுறுத்தி பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு பிரதியுபகாரமாக அதன் பிராந்திய நடவடிக்கைகள் குறித்து  மேலும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானை முன்வரச் செய்யவேண்டும். ஈரான் அதன் பங்கிற்கு தந்திரோபாய பொறுமையைக் கடைப்பிடித்து இராஜதந்திரத்துக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும்.

( த இந்து )