நாடுபூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர் இன்று காலை 6.00 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் சில பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

ரயில் கடவை வாயிற்காப்போர் கோரியுள்ள 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை கடந்து செல்கின்ற சாரதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.