மூன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேலும் 481 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து 44 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 147 பேரும் மற்றும் பஹ்ரைனிலிருந்து 290 இலங்கையர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும், விமான நிலையத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.