அரச பஸ் மோதி முதியவர் பலி - யாழ். பளை வைத்தியசாலையில் பதற்றம்

Published By: Digital Desk 4

07 Dec, 2020 | 10:29 PM
image

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மஞ்சள் கோட்டியில் மிதிவண்டியில் பயணித்த முதியவர் மீது அரச பஸ் மோதி குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து பளை வைத்தியசாலையில் சற்று முன்னர் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இத்தாவில் பகுதியைச் சேர்ந்த பொன்னையா சிவராசா (வயது 68) என்பவர் 7.30 மணியளவில் இத்தாவில் பகுதியில் வீதியில் மஞ்சள் கடவை ஊடாக மிதிவண்டியில் வீதியைக் கடந்துள்ளார். அதன்போது திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் அவர் மீது மோதியுள்ளது.

சம்பவத்தை அடுத்து அவரை மக்கள் உடனடியாக வாகனம் ஒன்றில் ஏற்றி பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

இருந்தபோதிலும் அங்கு கூடியவர்கள் சிலர் வைத்தியர்கள் மருத்துவம் பார்க்காமலேயே அவர் உயிரிழந்ததாக எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15