வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் இன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 27 மருத்துவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 மருத்துவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து மாவட்ட, ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு 101 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் ஒருதொகுதி மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது