(க.கிஷாந்தன்)

நுவரெலியா குதிரை பந்தய திடலில் திடலுக்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்ல உதவும் குதிரை ஒன்று இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குதிரை திடலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஊடாக குதிரை பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.   

எனினும் அதன் உரிமையாளர் உரிய முறையிலான சிகிச்சைகளை மேற்கொள்ளாத நிலையில் இக்குதிரை இன்று காலை உயிரிழந்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.