மஹர சிறையில் இறந்தவர்களை இனங்காணாமல் இருப்பது பாரிய சந்தேகம் - நளின் பண்டார

Published By: Digital Desk 4

07 Dec, 2020 | 09:08 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹர சிரைச்சாலை கலவரம் இடம்பெற்று ஒருவார காலம் கடந்தும் மரணித்தவர்களில் 4 பேர் மாத்திரமே இதுவரை இனம் காணப்பட்டிருக்கின்றனர். அதனால் இந்த சம்வத்தின் பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கவேண்டும்.

அத்துடன் மரணித்தவர்களின் பிரேத பரிசோதனை நடத்தாமல் எரித்துவிடவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹர சிறைச்சாலை கலவரத்தில் 11பேர் மரணித்துள்ளனர். அவர்களில் 4 பேரின் சடலங்களே இதுவரை இனம் காணப்பட்டிருக்கின்றன. இலங்கை பொலிஸாருக்கு இதனை கண்டுபிடிக்க 24 மணி நேரம் போதும். அதனால் இந்த விடயத்துக்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கும் என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது. மரணித்தவர்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அவர்களை எரித்துவிடவே முயற்சிக்கின்றனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் உறவினர்கள், அவர்களின் பிள்ளைகள், கனவர் தொடர்பில் இன்னும் முறையான தகவல் தெரியாமல் சிறைச்சாலைக்கு முன்னால் அழுதுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உண்மையான தகவல்களை தெரிவிக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. அரசாங்கத்தின் இயலாமையை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். 

அதேபோன்று அரசாங்கத்தின் சதித்திட்டங்கள் மற்றும் கொலை காலாசம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதற்கு மஹர சிறைச்சாலை கலவரம் சிறந்த சாட்சியமாகும். அதனால் எமது நாடு மீண்டும் கடந்த கால கொலைகார கலாசாரத்துக்கா செல்கின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. சர்வதேச நாடுகளும் மஹர சிறைச்சாலை சம்வவம் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றன. 

சிறையில் இருக்கும் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அந்த பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகி இருக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31