நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. 143 குடும்பங்களை சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கற்குளம் படிவம் 4 கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் கற்குளம் கிராமத்தில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 37 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தகரக் கூடாரங்களுக்குள்ளும், மண்வீடுகளிலும் கைக் குழந்தைகள் கற்பிணித்தாய்மார், வயது முதிர்ந்தவர்களென பலரும் இக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய அடை மழை காரணமாக மக்கள் வசிக்கும் கூடாரங்களின் சுவர்கள் ஊறி இடிந்து விழும் அபாயநிலையில் இருக்கின்றது. வீடுகளுக்குள் மழைநீர் ஊற்றெடுத்து காணப்படுகின்றது.
மலசலகூடம், நிரந்தரவீடு, மின்சாரம், குடிநீரென அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்டுப்பகுதியை அண்டிய சூழலில் மக்கள் பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் கற்குளம் மக்கள் அன்றாட சீவியத்துக்காக நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகளென பலரும் கிராமத்து மக்களின் பக்கம் தமது பார்வையை செலுத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM