நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கிருலப்பனை பகுதியில் பணிபுரிந்த குறித்த யுவதி கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டார்.

அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் (04.12.2020) பெறப்பட்டன. பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த யுவதியை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.