மஹர சிறைச்சாலையின் அமையதின்மையின்போது உயிரிழந்த கைதிகளின் சடலங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இது குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிக்கை நீதிமன்று சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறை கலவரத்தில் உயிரிழந்த 11 பேரில் 7 பேர் நேற்று மாலை வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 3 ஆம் திகதி 31 மற்றும் 39 வயதான ஜா – எல, களுபாலம, வத்தளை மற்றும் உனுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந் நிலையிலேயே மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஜா எல, ரத்துபஸ்வல, வத்தளை, எடேரமுல்ல மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM