கடந்த வாரம் ஈரானின் ஒரு உயர் அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டதில் "செயற்கை நுண்ணறிவு" கொண்ட செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு இயந்திர துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களில் ஒருவரும், ஈரானிய பாதுகாப்பு அமைச்சின் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவருமான மொஹ்சென் ஃபக்ரிசாதே நவம்பர் 27 அன்று தெஹ்ரான் அருகே நடந்த தாக்குதலின் விளைவாக இறந்தார்.
இந் நிலையில் இந்த தாக்குதலானது, "செயற்கைக்கோளிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு மேம்பட்ட மின்னணு உபகரணங்களை" பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ரமஸான் ஷெரீப் உள்ளூர் ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஃபக்ரிசாதேவின் முகத்தை மாத்திரம் குறி வைத்த வன்னம் இயந்திர துப்பாக்கி ஒரு இடத்தில் பொருத்தப்பட்டிருந்ததுடன், ஒரு செயற்கைக்கோள் உதவியுடன் ஆன்லைன் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலக்கை தாக்குவதற்கு மேம்பட்ட கமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு என்வற்றையும் பயன்படுத்தியுள்ளது.
இதன் மூலமே ஃபக்ரிசாதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் பயங்கரவாதிகள் எவரும் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
சம்பவம் நடத்த போது ஃபக்ரிசாதேவின் மனைவி 25 சென்டிமீட்டர் (10 அங்குலங்கள்) தொலைவில் இருந்தபோதிலும், அவர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகவில்லை.
செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு ஆயுதத்தைப் பயன்படுத்தி ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஈரானிய அரபு மொழி அரசு செய்தி நிறுவனமான அல்-ஆலம் முன்னதாக ஆதாரங்களை மேற்கோளிட்டு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM