Published by T. Saranya on 2020-12-07 10:51:52
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55,155 ஆகும். அவர்களில் 175 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் மொத்தம் 2,292,497 பேர் கொரோான தொற்றினால் பாதிக்கபட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 11,022 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் 8,560 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.