இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்ப்பட்டவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கபட்டமையால்  பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது.  அதற்கு முன், மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான பி. பி. இ கிட் ( PPE kits) எனப்படும் முழு பாதுகாப்பு கவச உடைகளை  அணிந்து கொண்டு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் முழு பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டுள்ளார். 

இந்நிகழ்ச்சியில் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டுள்ளார்.  இதேபோன்று மணமகளும், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.  இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.