லொத்தர் சீட்டுகளை அச்சிட மில்லியன் கணக்கான நிதி செலவு - கோப் குழு

By Vishnu

07 Dec, 2020 | 11:04 AM
image

2017ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபையின் கொள்முதல் செயற்பாடுகளில் வெளிவிவகார அமைச்சின் கடுமையான தலையீடுகள் காணப்பட்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் வெளிப்பட்டது.

இதற்கமைய 2017ஆம் ஆண்டு சுரண்டல் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்கான  விலைமனுக்கள் கோரப்பட்டு கொள்முதல் நடைமுறைகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தபோதும், அப்போதிருந்த வெளிவிவகார அமைச்சரின் தேவைக்கு ஏற்ப அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் விலைமனுக் கோரல் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு நிறுத்தப்பட்டமை முறையற்றது என அப்போதிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தபோதும், அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் இது நிறுத்தப்பட்டிருந்தது. 

இதற்கமைய, சுரண்டல் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் அக்வா ஃப்ளெக்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது. செல்வாக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுக்கு அமைய லொத்தர் சீட்டுக்களை அச்சடிக்கும் ஒப்பந்தம் பிரின்ட் கெயார் செக்குவர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமையையும் கோப் கவனத்திருந்தது. அமைச்சரவை முடிவு தேசிய லொத்தர் சபைக்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இதனால் 2020 வரை புதிய விலைமனுக் கோரலுக்கு முடியாதிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த 04ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடியபோது தேசிய லொத்தர் சபையின் கொள்முதல் தொடர்பான விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளிப்பட்டன.

மேலும், 2017,2018,2019 ஆண்டுகளுக்கான தேசிய லொத்தர் சபையின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது. இது குறித்து ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் கோப் குழு பணிப்புரை விடுத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:00:01
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40