நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று ஒரே நாளில் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 285 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், 77 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.