மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் மிருகங்களை கொல்லும் வெடி வைத்திருந்த விவசாயி ஒருவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கரடியனாறு பிரதேசத்தில் உள்ள குறித்த விவசாயின் வீட்டை சோதனையிட்டபோது மிருகங்களை கொல்வதற்காக மறைத்து வைத்திருந்த 9 வாய்வெடிகளை மீட்டதுடன் விவசாயி ஒருவர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட விவசாயியை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (04) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 18 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டர்.