இந்­திய மத்­தி­ய­ரசின் உயர் மட்டக் குழு­வினர் இவ்­வார இறு­தியில் இலங்­கைக்கு வரு­கின்­றனர். அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்டக் குழு­வினர் மூன்று நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருப்­ப­துடன் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ளனர்.

குறிப்­பாக இலங்கை - இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவில் தீர்­மா­னிக்­கப்­பட்ட உத்­தேச பொரு­ளா­தாரம் மற்றும் தொழில்­நுட்ப கூட்டு ஒப்­பந்தம் (எட்கா) தொடர்­பாக இந்­திய மத்­தி­ய­ரசின் உயர் மட்ட குழு­வினர் அவ­தானம் செலுத்த உள்­ளனர். உள் நாட்டில் தேசிய அர­சி­யலில் சூடுப்­பி­டித்­துள்ள எட்கா ஒப்­பந்­தத்தை நிறை­வேற்றும் உறு­தி­யான நிலைப்­பாட்டில் பிர­தமர் உள்ள நிலையில் நல்­லாட்­சியின் பங்­கா­ளி­க­லாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் விமர்­சிக்­கின்­றனர்.

இதனால் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­துள்ள இலங்கை - இந்­திய கூட்டு ஒப்­பந்தம் இந்­திய உயர் மட்ட குழு­வி­னரின் இலங்கை விஜ­யத்தின் போது கூடிய கவ­னத்தில் கொள்­ளப்­பட உள்­ளது.

எவ்­வா­றா­யினும் இம்­மாதம் 11 மற்றும் 12 ஆம் திக­தி­களில் நடைப்­பெ­ற­வுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்­து­கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் இந்­திய உயர் மட்ட குழு­விற்கு தகவல் தொழில்­நுட்ப , உள்­ளு­ராட்சி நிர்­வாகம் மற்றும் நகர அபி­வி­ருத்தி மத்­தி­ய­மைச்சர் கே.டி. ராமா ராஹோ தலை­மைத்­தாங்­கு­கின்றார்.

உலக வங்கி , ஆசிய அபி­வி­ருத்தி வங்கி மற்றும் சர்­வ­தேச தொழி­லாளர் அமைப்­புடன் இணைந்து மனித வள உச்சி மாநாட்­டினை அர­சாங்­கம்­ஏற்­பாடு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அமிட் றோர் ஆகியோர் விஷேட உரை நிகழ்த்த உள்ளனர்.