மும்பையின் லால்பாக் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீ விபத்து நடந்த இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது என்று பிரஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணங்கள் உடனடியாக தெரியவரவில்லை. சம்பவ இடத்தில் விசாரணையும் நடந்து வருகிறது.