காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான நிதியை ஒதுக்குமாறு கோரி போராட்டம்

Published By: Gayathri

05 Dec, 2020 | 03:59 PM
image

(நா.தனுஜா)

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான 6,000 ரூபா மாதாந்தக்கொடுப்பனவிற்கான நிதியை 2021 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, காணாமல்போனோரின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இணையவழி மகஜர் ஒன்றை வெளியிட்டிருப்பதுடன் தமக்கு ஆதரவாக அதில் கையெழுத்திடுமாறு பொதுமக்களைக் கோரியிருக்கின்றனர்.

அந்த மகஜரில் கூறப்பட்டிருப்பதாவது:

தமது அன்பிற்குரியவர்கள் காணாமல்போனமைக்கான சான்றிதழ் காணாமல்போனோரின் உறவினர்களிடம் காணப்படுமாயின் அவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கென கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தில் அரசாங்கத்தினால் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 

காணாமல்போனோர் தொடர்பில் முறையான விசாரணையொன்று நடத்தப்பட்டு அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படும் வரையில் காணாமல்போனோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதற்கான ஒரு திட்டமே அதுவாகும்.

இறப்புக்கான காரணமாக 'காணவில்லை' என்று குறிப்பிடப்பட்ட இறப்புச்சான்றிதழைப் பெற்றிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை நீடிப்பதற்கான தீர்மானம் கடந்த 2019 அக்டோபரில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி கடந்த 2019 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் இடைக்கால நிவாரணக்கொடுப்பனவு நிறுத்தப்படும்வரை, தமது உறவினர்கள் காணாமல்போனமைக்கான சான்றிதழைக்கொண்டிருந்த 153 குடும்பங்களுக்கு மொத்தமாக 11 மில்லியன் ரூபா இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது.

தனியொரு வருமான மார்க்கத்தின் ஊடாக மாத்திரம் இயங்கிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களுக்கு இந்த சிறிய கொடுப்பனவு பெரும் உதவியாக அமைந்தது. 

காணாமல்போனோரின் குடும்பங்களில் பல முதிய மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அத்தோடு அவர்கள் தமது அன்பிற்குரியவர்களைத் தேடும் முயற்சியில் கணிசமான பணத்தை செலவு செய்திருக்கிறார்கள்.

இருப்பினும் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவில், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. 

ஆகவே, தமது உறவினர்கள் காணாமல்போனமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். 

அத்தோடு இறப்பிற்கான காரணமாக 'காணவில்லை' என்று குறிப்பிடப்பட்ட இறப்புச்சான்றிதழைப் பெற்றிருக்கும் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை நீடிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50