மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடிக் கடலில் நேற்று (04.12.2020) மதியம் நீராடிய இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (05.12.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்றதாவும், அதில் ஒரு இளைஞனே காணாமல் போயிருந்ததாகவும் தெரிய வருகின்றது. ஏனைய இருவரும் மீட்கப்பட்டிருந்த நிலையில் புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சீரற்ற கால நிலையினால் குறித்த கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM