(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்றுவார்களாயின் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களையும் விரைவில் விடுவிக்க முடியும்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.