ஃபைப்றோறிஸ்பிளாசியா ஓசிஃபிகான்ஸ் ப்ரோக்ரஸிவா என்ற பாதிப்பிகுரிய சத்திரசிகிச்சை
மரபணு மாற்ற குறைபாடு காரணமாக ஒரு மில்லியனில் ஒருவருக்கு ஃபைபிறோறிஸ்பிளாசியா- ஓசிஃபிகான்ஸ் ப்ரோக்ரஸிவா எனப்படும் அரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு இது வரை முறையான சிகிச்சை கண்டறியப்படாமல் இருந்தது.

தற்போது பிரத்தியேக சத்திர சிகிச்சை மூலம் இந்த பாதிப்பைக் குணப்படுத்த இயலும் என கண்டறியப்பட்டிருக்கிறது.
இன்றைய திகதியில் மரபணு குறைபாடு மற்றும் மரபியல் காரணிகளால் பிறக்கும் குழந்தைகளில் ஏராளமானவர்களுக்கு உடல் உறுப்பு குறைபாடு ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பாத பகுதியில் குறிப்பாக இரண்டு கால்களிலுள்ள கட்டை விரல்கள் மட்டும் தன் இயல்பான தோற்றத்திலிருந்து விலகி, பக்கவாட்டில் வளைந்து வித்தியாசமாக தோன்றும்.
இத்தகைய நிலையின் காரணமாக பாதங்களின் வளர்ச்சியிலும் வலிமையிலும் வேறுபாடு உண்டாகிறது. இதுதொடர்பாக மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டு, இதற்கான காரணம் துல்லியமாகக் அவதானிக்கப்படுகின்றது.
பின்னர், இத்தகைய கட்டைவிரலில் ஏற்படும் வலி, வீக்கம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்தாலோ அந்த நோய்க்குறிக்கான நிவாரணம், சிகிச்சையாக வழங்கப்படுகிறது.
பின்னர் இதற்காக தற்போது கண்டறியப்பட்டிருக்கும் சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை செய்து இதனை குணப்படுத்துகிறார்கள்.
டொக்டர் பார்த்திபன்.
தொகுப்பு அனுஷா.