கோஸ்ட்டியாக பயமுறுத்தும் காஜல் அகர்வால்

Published By: Gayathri

05 Dec, 2020 | 11:45 AM
image

திருமணத்திற்குப் பிறகு நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படத்திற்கு 'கோஸ்ட்டி' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கோஸ்ட்டி' என பெயரிடப்பட்டிருக்கிறது. 

இப்படத்தில் கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த ஃபேண்டஸி ஹாரர் படத்திற்கு படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கொமடி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

ஆர் .எஸ். ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, விவேக்-மெர்வின் இசை அமைக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் இயக்குனர் கல்யாண் தெரிவித்திருக்கிறார். 

திருமணத்திற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் கோஸ்ட்டி எனும் பேய் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right