அமெரிக்கா நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் நாட்டி சுமார் அரை நூற்றாண்டுகளுக்குப் பின் சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நாட்டியுள்ளது.
1969 ஆம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நாட்டினார்.
இந்நிலையில், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, அங்கிருந்து பாறை, மணல் மாதிரிகளை எடுத்து கொண்டு பூமிக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சாங்-இ 5 விண்கலத்தை சீனா அனுப்பியது.
இதையடுத்து விண்கலத்திலிருந்து லேண்டர் மற்றும் அசென்டர் கீழே இறக்கப்பட்டன. அதிலுள்ள கருவிகள் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டதையடுத்து பீஜிங் நேரப்படி இரவு சுமார் 11.00 மணியளவில் பூமிக்கு விண்கலம் புறப்பட்டது.
அங்கிருந்து புறப்படும் முன்பு சாங்கே - 5 லேண்டர் விண்கலம் சீன தேசிய கொடியை நாட்டியுள்ளது.
இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில், காற்றில்லாமல் அசைவற்று இருக்கும், ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி பறக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன், அங்கிருந்து புறப்படுவதற்கு முன், சாங்கே -5 விண்கலத்தின் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளன.
முந்தைய இரண்டு சீன நிலவுப் பயணங்களில் கைவினைப் பூச்சுகளால் ஆன கொடிகள் பயன்படுத்தப்பட்டன. எனவே அவற்றை நிலவில் நாட்ட முடியவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM