புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்ய விரும்பினால்  தெற்கிலும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்போம்  - விமல் வீரவன்ச 

By T Yuwaraj

05 Dec, 2020 | 12:45 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு கிழக்கில் பிரதான தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களுக்கான முழுமையாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். 

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட  முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு -கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீளவும் இயக்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவே நாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வாழைச்சேனை தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழிற்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம். குறிப்பாக பரந்தன்  இரசாயன தொழிற்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

முறையான சூழலியல் ஆய்வுகளை செய்தும், சுற்றுச்சூழல் நிலைமைகளை கருத்தில் கொண்டும் அதற்கு ஏற்றால் போல் இரசாயன வலயம் உருவாக்கப்படும். இந்த வேலைத்திட்டங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதில் வடக்கு கிழக்கு மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து பல காரணிகளை ஸ்ரீதரன் எம்.பி, சபையில் தெரிவித்தார். 

தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தமையை நான் முழுமையாக வரவேற்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலர் வாய்களில் இருந்து இவ்வாறு மக்களின் உண்மையான பிரச்சினைகள் வெளிவராது. அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடுகளில் விருப்பம் காட்டுவதாக தெரிவித்தார். 

அவ்வாறான முதலீட்டாளர்கள் இருந்தால் எம்முடன் தொடர்புபடுத்திவிடுமாறு ஸ்ரீதரனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம்.

தேசிய தொழிற்சாலைகளை பலப்படுத்த அரசாங்கம் துரிதமாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. புதிய தொழில் பேட்டைகளை உருவாக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். ஏறாவூர் பகுதியில் துணி தொழிற்சாலையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக இந்த பகுதிகளில் வாழ்கின்றனர். ஆகவே ஐந்தாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு கொடுக்க முடியும். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கவுள்ளோம். 

இதுவும் அப்பகுதி மக்களுக்கான வலமாக மாற்றுவோம். சகல அடிப்படை வசதிகளையும் வழங்குவோம். தொழிற்சாலை கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய...

2022-11-30 16:19:23
news-image

பண மோசடி : டுபாயிலுள்ள ள்ள...

2022-11-30 18:24:00
news-image

தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் தோட்டங்களில்...

2022-11-30 16:40:28
news-image

மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பெற்றோரிடமே வழங்க...

2022-11-30 15:56:37
news-image

ஒருநாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின்...

2022-11-30 18:34:10
news-image

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ள...

2022-11-30 16:31:06
news-image

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி :...

2022-11-30 17:31:17
news-image

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக்...

2022-11-30 16:55:29
news-image

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3...

2022-11-30 17:21:40
news-image

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழர்கள் தயாரில்லை...

2022-11-30 16:25:40
news-image

யூடியூப்பை பார்த்து இராணுவத்தினரின் ஸ்னைப்பர் துப்பாக்கி...

2022-11-30 16:28:07
news-image

மக்களுக்காக எந்த மட்டத்திலும் அரசியல், தொழிற்சங்க...

2022-11-30 16:17:16