இந்தியத் திரைபட பழம்பெரும் நடிகையான ஜெயசித்ராவின் கணவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

'குறத்தி மகன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகையாக ஜெயசித்ரா உள்ளார்.

ஆந்திரா மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜெயசித்ரா, 1983-ல் கணேஷைத் திருமணம் செய்தார். இவர்களுடைய மகன் அம்ரிஷ், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக உள்ளார்.

ஜெய்சங்கர், சிவகுமார், கமலுடன் இணைந்து பல படங்களிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்தவர்.

இந்நிலையில், ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் இன்று திருச்சியில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஜெயசித்ராவின் கணவர்  மறைவுக்கு மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.