Published by T. Saranya on 2020-12-04 16:39:00
வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் அனைத்தும் இன்று (04.12.2020) முதல் மீளத்திறக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் அனைத்தும் நாட்டில் பரவிய கொரோனா அச்சம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.