இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவம் குறித்த தெரியவருவதாது,
உத்தரபிரதேச மாநிலம் மெஹோபா மாவட்டத்தில் உள்ள புதோதரா கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் அங்குள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் மதியம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
30 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்க 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது. மேலும் சிறுவன் சுவாசிப்பதற்காக ஒக்சிசன் செலுத்தப்பட்டது. ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை.
இதற்கிடையே மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
உடனே அவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்துள்ளது.
இதனால் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM