நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை 406 பேர் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,438 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 26,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலையில் தங்கி 6,471 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 390 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 129 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.