சமூகவலைத்தளங்களில் அதிகரித்து வரும் பல்வேறு போலி தகவல்களுக்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்கள் அல்லது  சதி கோட்பாடுகள் எனக் கருதும் பதிவுகளை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் பொது சுகாதார நிபுணர்களின் உதவியுடன் தடுப்பூசிகள் குறித்த தவறான கூற்றுக்களை அகற்றத் தொடங்குவார்கள்.

"கொரோனா தடுப்பூசிகள் விரைவில் உலகம் முழுவதும் வெளிவரும் என்ற சமீபத்திய செய்தியைக் கருத்தில் கொண்டு, வரும் வாரங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள பொது சுகாதார நிபுணர்களால் துண்டிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் குறித்த தவறான கூற்றுக்களை அகற்றத் தொடங்குவோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கொரோனா தடுப்பூசிகளில் மைக்ரோசிப்கள் உள்ளன, அல்லது அதிகாரப்பூர்வ தடுப்பூசி மூலப்பொருள் பட்டியலில் இல்லாத வேறு தகவல்களை நாங்கள் அகற்றுவோம்" என அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் பற்றிய உண்மைகள் தொடர்ந்து உருவாகி வருவதால், பொது சுகாதார அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் கிடைக்கும்போது அதன் கொள்கைகளை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளதுஃ

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, உலகளாவிய ரீதியில் 64,918,435 கொரோனா தொற்றாளர்களும் 1,501,076 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.