தனது நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஒடுக்குமுறையை உறுதியாக எதிர்ப்பதாகவும், தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துமாறும் அமெரிக்காவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் SMIC மற்றும் CNOOC என்ற இரு நிறுவனங்களை பாதுகாப்பு தடுப்புப் பட்டியலில் சேர்த்ததற்கு பின்னர் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் ஒரு மாநாட்டில் இதனைக் கூறியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை சீனாவின் உயர்மட்ட சிப்மேக்கர், எஸ்.எம்.ஐ.சி மற்றும் எண்ணெய் நிறுவனமான சி.என்.ஓ.சி ஆகியவற்றை சீன இராணுவ நிறுவனங்களின் தடுப்புப்பட்டியலில் சேர்த்தது,

இது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பு பீஜிங்குடனான பதட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.