மஹர சிறைச்சாலையின் அமையின்மையின்போது உயிரிழந்த 11 சிறைக் கைதிகளின் உடல்களை வைத்திய பிரேத பரிசோதனைகள் நிறைவுபெறும் வரை தகனம் செய்வதை தவிர்க்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமை உள்ளிட்ட மூன்று விடயங்களே அமையின்மைக்கு பிரதான காரணம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமையதின்மை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை பதிவுசெய்துள்ளது.

மஹர சிறைச்சாலைக்கு இரு தனித்தனி சந்தர்ப்பங்களில் விஜயம் மேற்கொண்டே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஆணைக்குழு மஹர சிறைச்சாலையில் கைதிகளின் நெரிசலை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

அடுத்தபடியாக கைதிகளின் உடல்நலம் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்தப்பட வேண்டும், மேலும் சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய கைதிகள் அனைவருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.