அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியை சுழல் பந்தவீச்சால் மிரட்டிய இலங்கை அணி இங்கிலாந்துடன் பெற்ற  தொடர் தோல்வியை ஈடுகட்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த வெற்றியானது 17 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பெற்ற வெற்றியாக பதிவாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

86 ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 353 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்துடன் 176 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

268 ஒட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவி கொண்டது.

அவுஸ்திரேலிய  அணி சார்பில்  அணித்தலைவர் ஸ்மித்  55 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் ஹேரத் 5 விக்கட்டுகளையும், சந்தகன் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக குசால் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.