ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலிய குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விமான நிறுவனங்கள், பயண மற்றும் சுற்றுலா அலுவலகங்கள் மூலம் சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசா வழங்கும் இந்த நடைமுறைமை ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பின் கட்டமைப்பிற்குள் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு இயல்பாக்கம் ஒப்பந்தம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

செப்டம்பர் 15 அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை இஸ்ரேலுடனான உறவை முழுமையாக இயல்பாக்குவதற்கான இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இது பாலஸ்தீனியர்களிடையே கோபத்தைத் தூண்டியதுடன் இந்த ஒப்பந்தங்கள் தங்கள் உரிமைகளை புறக்கணிப்பதாகவும் பாலஸ்தீனிய காரணத்திற்காக சேவை செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.