இது என்ன மர்மம் ? உலகைச்சுற்றும் மர்ம உலோகப்பொருளால் பரபரப்பு

Published By: Digital Desk 3

04 Dec, 2020 | 03:54 PM
image

அமெரிக்காவின் உட்டா மற்றும் ருமேனியாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோகப்பொருள் தற்போது கலிப்போர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி , அமெரிக்காவிலுள்ள உட்டா மாகாணத்தில் ரெட் ராக் பாலைவனத்தில் ஆடுகள் கணக்கெடுப்புப் பணியின்போது, ஒரு பள்ளத்தாக்கின் அருகே தரையில் திடீரென 12 அடி உயரமான மர்ம உலோகப்பொருள் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்ம உலோகப்பொருளை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், 27 ஆம் திகதி அந்த மர்ம உலோகத் தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.

இன்னொருபக்கம், அந்த தூண் 2015, 2016 ஆண்டுகளில் அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அதேநாள்  27 ஆம் திகதி ருமேனியா நாட்டில் அதேபோல் ஒரு மர்ம உலோகப்பொருள் திடீரென தோன்றியுள்ளது. அதன் உயரம் 13 அடி. அது டிசம்பர் 31 ஆம் திகதி காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து கலிபோர்னியாவின் அட்டாஸ்கடெரோ நகரதத்திலுள்ள உள்ள ஒரு மலையின் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை காலை ஒரு மர்மமான உலோகப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் வேகமாக பரவவே அதன் அருகே நின்று பலர் செல்பி எடுத்த நிலையில், புதன்கிழமை இரவில் காணாமல் போய் விட்டது.

இதுகுறித்து கலிபோர்னியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவை மூன்றுமே தயாரிப்பாளர் ஸ்டான்லி குப்ரிக்கின் 1968 இல் வெளியான "2001: எ ஸ்பேஸ் ஒடிஸி" திரைப்படத்திலுள்ள ஒரு காட்சியில் இருந்து மாபெரும் ஸ்லாப்பை ஒத்ததாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மர்ம உலோகப்பொருட்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது. யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு உலோகப்பொருளை அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த மர்ம உலோகப்பொருள் குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் இவ்வாறு குறித்த உலோகமர்மத் தூண் 3 வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில்...

2025-01-19 20:04:25
news-image

உத்தரப் பிரதேசகும்பமேளாவில் தீ விபத்து

2025-01-19 19:13:00
news-image

ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யவுள்ளவர்களின் விபரங்கள்...

2025-01-19 16:52:36
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது!

2025-01-19 16:35:17
news-image

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து...

2025-01-19 14:00:06
news-image

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ்...

2025-01-19 11:50:57
news-image

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும்...

2025-01-19 11:40:35
news-image

உக்ரைன் ஜனாதிபதி பிரிட்டிஸ் பிரதமர் பேச்சுவார்த்தை...

2025-01-19 11:14:57
news-image

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய்...

2025-01-19 08:48:30
news-image

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே...

2025-01-18 21:14:01
news-image

ஈரானில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-18 16:35:56
news-image

காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

2025-01-18 14:20:26