நான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்

Published By: Vishnu

04 Dec, 2020 | 09:12 AM
image

காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது போட்டி நேற்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களையும், அஸான் அலி 29 ஓட்டங்களையும், அஸாம் கான் 25  ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாணம் அணி சார்பில் வர்னிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், உஷ்மன் சின்வாரி, தனஞ்சடிய டிசில்வா மற்றும் சுரங்க லக்மல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

171 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணியானது அவிஷ்க பெர்னாண்டோவின் வலுவான ஆரம்பத்துடன் 19.4 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவுசெய்தது.

யாழ்ப்பாணம் அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 59 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களையும், மினோட் பானுகா 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் யாழ்ப்பாணம் அணியானது தான் எதிர்கொண்ட நான்கு போட்டிகளிலும் வெற்றியை பதிவுசெய்து 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரம் நேரம் காலி அணிக்கு இது நான்காவது தோல்வியாகும். அதனால் தொடரில் ஒரு வெற்றியை கூட பெற முடியாது அவல நிலையில் இருக்கும் காலி அணி எதுவித புள்ளிகளுமின்றி இறுதி இடத்தில் உள்ளது.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற எல்.பி.எல். தொடரின் 10 ஆவது போட்டியில் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் மற்றும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகள் மோதின.

இப் போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் குசல் மெண்டீஸ் 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களையும், குசல் பெரேரா 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் தம்புள்ளை அணி சார்பில் கசூன் ராஜித மற்றும் புஷ்பகுமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், ரமேஸ் மெண்டீஸ் மற்றும் சமித் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்று வெற்றியினை பதிவுசெய்தது.

அணி சார்பில் அஞ்சலோ பெரேரா 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், தசூன் சானக்க 33 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அஞ்சலோ பெரேரா தெரிவானார்.

தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது வெற்றியை பதிவுசெய்து 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேநேரம் கண்டி அணியின் மூன்றாவது தோல்வி என்பதால் 2 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 11 ஆவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், கொழும்பு கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22