கொவிட்-19 பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 476 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பினர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிலிருந்து 130 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 45 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து ஏழு பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

திருப்பி அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் பணிபுரியும் போது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளான 294 பேர் இலங்கையர்கள் இன்று காலை இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தினூடாக மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை 288 இலங்கையர்கள் இன்று காலை மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையில், இலங்கையில் பல்வேறு கட்டுமான வேலைகளில் பணியாற்றும் மற்றும் இந்திய இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 170 இந்திய பிரஜைகள் நேற்று பிற்பகல் இந்தியன் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலமாக புதுடெல்லிக்கு நோக்கி புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.