ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு வரையிலான பகுதியில் கட்டுபடுத்த பேலியாகொடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார்.

குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் சனீமா விஜேபண்டார நேற்று (29) பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாதயாத்திரையில் பொதுமக்களுக்கு தொந்தரவு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமாயின் உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை பாதயாத்திரையை வரக்காபொல பகுதியில் கட்டுபடுத்த பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை வரக்காபொல நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு, பாதயாத்திரையில் பொதுமக்களுக்கு தொந்தரவு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமாயின் உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.