பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்புடன் நிறைவேற்றம்

By T Yuwaraj

03 Dec, 2020 | 10:05 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கட்டளை 207 க்கு எதிராக எதிர்க்கட்சி தமிழ் தரப்பினர் வாக்கெடுப்பு கோரிய நிலையில் அதற்கு ஆதரவாக 137 வாக்குகளும்  எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

அதனடிப்படையில் மேலதிக 132 வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. காலை 9.30 மணி முதல் இடம்பெற்ற விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் விவாதத்தில் உரையாற்றும் போது ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இறுதியில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சபையின் ஆதரவை சபாநாயகர் கோரியபோது அமைச்சின் செலவுக்கட்டளை 207க்கு  தமிழ் தேசி மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வாக்கெடுப்பு கோரினார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். வாக்கெடுப்பு சபையில் இலத்திரணியல் அடிப்படையில் இடம்பெறாமல் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசன வரிசையின் அடிப்படையில் இடம்பெற்றது. 

அதனடிப்படையில் ஆரம்பமாக ஆளும் தரப்பு வரிசையில் முதலாவது வரிசையில் இருப்பவர்கள் எழுந்து குறித்த செலவுக்கட்டை இலக்கத்துக்கு ஆதரவை தெளிப்படுத்தினர். அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் ஆசன வரிசைகளில் இருப்பவர்கள் தங்களது ஆதரவை எழுந்து நின்று வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து எதிர்த்தரப்பில் முதலாவது வரிசையில் இருந்தவர்களிடம் ஆதரவு கேட்டபோது அதில் ஒருவர் ஆதரவாக எழுந்திருந்தார். பின்னர் குறித்த செலவு கட்டளைக்கு எதிராக வாக்களிக்க எழுந்திருக்குமாறு வரிசை பிரகாரம் சபாநாயகர் அழைத்தபோது ஆளும் தரப்பில் யாரும் இருக்கவில்லை. எதிர்த்தரப்பில் 5 பேர் எதிராக வாக்களித்தனர். 

அதன் பிரகாரம் குறித்த செலவுக்கட்டளைக்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 5வாக்குகளும் வழங்கப்பட்டு 132 மேதிக வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு அங்கிகரிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34