நாட்டில் இன்று மேலும் ஒரு தொகை  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த வகையில் இன்று 350 புதிய கொரொனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் குறித்த அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,760 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  19,032 ஆக அதிகரித்துள்ளது.

433 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் 6,604 பேர் தொடர்ந்தும்  வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில், 124 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.