புரவி புயலின் தாக்கத்தின் காரணமாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள கத்தாளம் பிட்டி கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களுக்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

'எம்மவர்களுக்கு கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் காந்தள் உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் மன்னாரில் 'புரவி சூறாவளி' தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.