(செ. தேன்மொழி)
கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தாகொள்ள பகுதியில் நேற்று புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஆடியம்பலம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மோட்டார்  சைக்கிள் கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன்,  அவரால் கொள்ளையிடப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.