யாழ் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு,  இடைந்தங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு சுமார் 50 வீடுகள் சேதமாகியுள்ள நிலையில், 55 குடும்பங்களை சேர்ந்த 186 நபர்கள், வல்வை முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சரியாக நேற்றிரவு 7.35 மணியளவில் அங்கு பலந்த காற்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மீன்பிடி உபகரணங்கள் பல சேதமாகியுள்ளதாகவும், குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.