மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று இரவு 8 மணியளவில் புதிர் பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரியின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மேட்கொண்ட சோதனையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இவர் அந்த பகுதியில் கடந்த வருடம் பொலிசாரின் கைதுப்பாக்கியை பறித்துச் சென்ற பல்வேறுபட்ட குற்றச் செயலில் ஈடுபட்டவர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.