புரெவி  சூறாவளி தாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை  மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் நேரடியாக கிண்ணியா பிரதேசத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

குறித்து விஜயமானது இன்று (03) இடம்பெற்றதுடன் கிண்ணியா பிரதேச கரையோரம் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை இதன்போது பார்வையிட்டனர்.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.