பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் சட்டமூலத்தை ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,

“ அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் சட்டமூலத்தை ஜப்பான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தலைநகர் டோக்கியாவில் தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 150,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,172 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில்,பின்லாந்து நாட்டிலும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி இசவசமாக வழங்கப்படும் என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பின்லாந்தின் குறிக்கோள் உரிமம் பெற்ற தடுப்பூசி மூலம் முழு மக்களையும் பாதுகாப்பதாகும். தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும்  இலவசமாக வழங்கப்படும். முதல் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் கிடைக்கும் என்று அமைச்சகம் மதிப்பிடுகிறது. தடுப்பூசிகளை வழங்கும் செய்றபாட்டை விரைவில் ஆரம்பிக்க வேண்டும், ” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 25,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 408 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.