ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான விளம்பரத்தில், அதிகப்படியான எண்ணிக்கையால் யானை-மனிதர்களுக்கு இடையேயான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால், யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை ஏலமிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிக்கும் வசதி கொண்ட எவர் வேண்டுமானலும், யானைகளை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமீபியாவின் பாதுகாப்பு உந்துதல், அரசாங்க புள்ளிவிவரங்களின்படி யானைகளின் எண்ணிக்கை 1995 இல் சுமார் 7,500 இலிருந்து 2019 இல் 24,000 ஆக உயர்ந்துள்ளமையால சர்வதேச ஆதரவைப் பெற்றுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு நமீபியா ஆபத்தான உயிரினங்களின் உலகளாவிய வர்த்தகத்தை நிர்வகிக்கும் விதிகளிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியது.

அதன் வெள்ளை காண்டாமிருகங்களை வேட்டையாடுவது மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்களை நிராகரிக்க CITES கூட்டத்தின் போது நாடுகள் வாக்களித்த பின்னர் இது நிகழ்ந்தது.

நமீபியா நாடு அதிக மிருக வேட்டையையும் நேரடி விலங்குகளின் ஏற்றுமதியையும் அனுமதிக்க விரும்புகிறது. இது திரட்டும் நிதி விலங்கினங்களை பாதுகாக்க உதவும் என வாதிட்டுள்ளது.

ஒக்டோபரில், மேய்ச்சல் நிலத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய நமீபியாவில் உள்ள வோட்டர்பெர்க் பீடபூமி பூங்காவில் இருந்து 70 பெண் மற்றும் 30 ஆண் எருமைகளை விற்பனைக்கு விட்டது.

வறண்ட தென்னாப்பிரிக்க தேசமும்  ஒரு நூற்றாண்டில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டதால் 2019 இல் தேசிய பூங்காக்களில் இருந்து 500 எருமைகள் உட்பட 1,000 விலங்குகளை ஏலம் எடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.