மஹர சிறைச்சாலை கலவரத்தின் விளைவாக 02.12.2020 நிலவரப்படி 11 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 106 பேர் காயமடைந்துள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 28 பேர் தற்போது கொழும்பு வடக்கு போதான வைத்தியசாலையிலும், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 24 பேர் வெலிக்கட சிறைச்சாலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 53 கைதிகள் மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.