அடுத்த ஆண்டு ஜனவரியில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் அலுவலக நிர்வாகிகளுடன் சென்னையில் அமைந்துள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை இரு மணிநேர சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

சந்திப்பினையடுத்து வீடு திரும்பிய ரஜினிகாந்த், ஆலோசனைக் கூட்டத்தில் எனது கருத்தை நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். நிர்வாகிகள் தங்களது கருத்தை முன் வைத்தனர். அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். எனது முடிவுக்கு ரசிகர்கள் கட்டுப்படுவதாக உறுதி அளித்திருக்கின்றார்கள் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந் நிலையிலேயே அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31 இல் திகதி அறிவிப்பு, மாத்துவோம், எல்லாத்தையும்_மாத்துவோம்இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  என்று பதிவிட்டுள்ளார்.