கேப்டன் விஜயகாந்தின் மூத்த வாரிசான விஜயபிரபாகரன் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமாகிறார்

கேப்டன் விஜயகாந்தின் மூத்த வாரிசான விஜயபிரபாகரன் ‘என்னுயிர் தோழா’ என்ற வீடியோ அல்பம் மூலம் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமாகிறார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் புரட்சி நம்பி என்பவர் எழுத, ஜெப்ரி ஜோனாதன் என்பவர் இசையமைத்து இயக்கியிருக்கிறார். 

'தமிழரை என்னுயிர் என்பேன் நான்..' எனத் தொடங்கும் அந்த பாடலை விஜய பிரபாகரன் நடித்து, பாடியிருக்கிறார். 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோ அல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இதனை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்களும், தேமுதிக கட்சியின் தொண்டர்களும் இதனை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள். 

இதனிடையே கேப்டன் விஜயகாந்தின் இளைய வாரிசான சண்முகபாண்டியன் நடிகராக அறிமுகமாகி, ரசிகர்களிடம் பிரபலமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.